செய்திகள் பிரதான செய்தி

முகக்கவசத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டாமென கோரிக்கை!

சில அரசியல்வாதிகள் தங்களின் விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கண்டித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குறித்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க,

‘சில தரப்பினர் தங்களது விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் முக்கவசங்களில் அச்சிட்டுள்ளதை அவதானித்தோம். இது ஏமாற்றமளிக்கிறது. சுகாதார நெருக்கடியின்போது இத்தகைய நடவடிக்கைகளை நாம் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் வாக்காளர்கள் திகைத்துப் போவார்கள். எனவே, வேட்பாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்’ – என்றார்.

Related posts

கொவிட்-19; வட மாகாண மருத்துவ மன்றத்தின் ஊடக அறிக்கை

Tharani

மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

கதிர்

மின்சார உற்பத்தி 22.7 வீதமாக வீழ்ச்சி!

Tharani