in ,

முகக்கவசத்தை நேர்த்தியாக அணியுமாறு கூறி சுகாதாரப் பரிசோதகர் மீது தாக்குதல்

கடமை நிமித்தம் வவுனியா சாந்தசோலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய சம்பவமொன்று வவுனியா சாந்தசோலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

முகக்கவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்து சுகாதார பரிசோதகர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

டெல்டா வைரஸ் தொற்று மேலும் ஒருவருக்கு தொற்றுறுதி

ஊடகவியலாளர்கள் இருவரிடம் வாக்குமூலங்கள்