கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

முகமாலையில் உடல் எச்சம் காணப்பட்ட பகுதி குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (22) அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கியும் காணப்பட்டதுடன் விடுதலைப் புலிகளின் சீருடையும் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவன ஊழியர்களால் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில்விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார் குறித்த இடத்தில் அகழ்வினை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் அனுமதியை கோரியிருந்தனர்.

Related posts

குடிவரவு திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் வந்தது!

Tharani

யாழ் விமான நிலையம்; அரசியல் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை

G. Pragas

வந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”

Bavan