செய்திகள் பிரதான செய்தி

முகாபே யுகம் தேவையா? ஹிட்லர் யுகம் வேண்டுமா? தீர்வு உங்கள் கைகளில் – சஜித்

தேர்தலின் பின்னர் நாட்டின் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். மேலும்,

எமது நாட்டில் சர்வதேச மட்டத்திலான ஊடக வள பயிற்சி நிலையமொன்றை உருவாக்க எதிர்பார்க்கின்றேன். அதன் மூலம் நாட்டின் உள்ளக ஊடகத்துறையையும் வெளிநாடுகளிலுள்ள திறமையுள்ள ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து தொழில் ரீயான தொடர்புகளை திருப்திகரமான நிலைக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

சவால்களுக்கு மத்தியில் நாம் ஊடக கிராமம் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், ஊடகவியலாளர்களின் காணி, வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்தி, அந்த குறைபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.

சஜித் இல்லையேல் மாற்றுத் தேர்வு என்ன?. மாற்றுத் தேர்வு பற்றி சிந்திக்கும் போது எக்னலிகொட நினைவுக்கு வரவில்லையா? லசந்த விக்ரமதுங்க நினைவுக்கு வரவில்லையா?. போத்தால ஜயந்த மற்றும் வடக்கின் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட நிலையை விபரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நாட்டுக்கு முகாபே யுகம் தேவையா? ஹிட்லர் யுகம் தேவையா? தீர்வு உங்கள் கைகளில் – என்றார்

இதேவேளை, ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததுடன், ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, யுத்தத்தின் பின்னர் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Related posts

இதுவரை 12 ஆயிரம் பேர் கைதாயினர்!

G. Pragas

வட மாகாண தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம்

Tharani

இரணைதீவு மக்களுக்கு வாக்களிக்கும் வசதிகள் இல்லை

G. Pragas