செய்திகள் பிரதான செய்தி

முக்கிய அமைச்சரவை தீர்மானங்கள்!

அரசாங்கம் இன்று (20) வெளியிட்ட அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் தொடர்பான விபரம் வருமாறு,

 • வருமானத்தின் அடிப்படையிலான வரி தொடர்பில் இரட்டை வரி முறையை தடுத்தல் மற்றும் வரி செலுத்துவதை தட்டிக்கழிப்பதை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் செக்குடியரசுக்கும் இடையில் உடன்படிக்கை.
 • 2020ம் ஆண்டு முதல் தகுதிபெற்ற பயனாளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் உள்நுழைவதற்கான சந்தர்ப்பத்தை உறுதிசெய்தல்.
 • 2020ம் ஆண்டு சிறு போகம் தொடக்கம் விவசாயிகளுக்கு சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தேச திட்டம்.
 • அலுமினிய பவுடரை இலங்கையில் இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல்.
 • வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி நிறுவனத்தை ஏலமிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள அமைச்சரவையின் அங்கீகாரத்தை இரத்து செய்தல்.
 • கிருலப்பனை, கொழம்பகே மாவத்தையில் அமைந்துள்ள 624 வீடுகளை கொண்ட திட்டத்தின் நிர்மாண பணிகளுக்கான திட்டத்தை வகுத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.
 • தொழில்நுட்ப நிறுவனத்தின் (ITI) மாலபேயில் அமைந்துள்ள நவீன ஆய்வு மற்றும் அபிவிருத்தி கட்டிடத் தொகுதியில் (MRDC) அமைக்கப்படும் சீன – கூட்டு உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞான கூடம்.
 • உர பெறுகையை மேற்கொள்ளுதல்.
 • 47,700 மெற்றிக் தொன் யூரியா (கிரேனி யூலா) என்ற உரத்தை ஒரு மெற்றிக் தொன் 268.90 அமெரிக்க டொலர் என்ற வீதம் எக்றி வ்ர்டிலயிவன் இன்டர்நெசனல் டிரேடிங் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.
 • 15,000 மெற்றிக் தொன் ட்ரபிள் சுப்பர் பொஸ்பெற் என்ற உரத்தை ஒரு மெற்றிக் தொன் 262.74 அமெரிக்க டொலர் வீதம் கொள்வனவு செய்வதற்காக வெலன் சீ இன்டர்நெசனல் டிரேடிங் பிரைவட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.
 • 13,600 மெற்றிக் தொன் மியூரி செட் ஒப் பொட்டேஸ் என்ற உரத்தை ஒரு தொன் 317.25 அமெரிக்க டொலர் வீதம் எக்றி கொமடிட்டிஸ் என்ர பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.
 • வரையறுக்கப்பட்ட இலங்கையின் உர நிறுவனத்திற்காக 3060 யூரியா (பிறில்டி) என்ற உரத்தை ஒரு மெற்றிக் தொன் 285.00 அமெரிக்க டொலர்கள் வீதம் கொள்வனவு செய்வதற்காக எக்றி கொமடிட்டிஸ் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.
 • ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்ததில் சிவில் பணி ஒப்பந்த பொதி ஒன்றை வழங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுதல்.
 • ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடை முறைப்படுத்தப்படும் எரிசக்தி கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம் – பொதி 1 இன் கீழான கெரவலப்பிட்டி 220kV Switching Station நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்.
 • பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டம் 2 இன் கீழான இரண்டாவது நடவடிக்கை ‘ அ பொதி’.
 • பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கும் டிப்ளோமா தாரிகளுக்கும் பயிற்சியளாருக்கான நியமன கடிதத்தை வழங்குதல் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்களினால் மேற்கொள்ளுதல்.
 • இந்த பயிற்சியாளர்கள் பயிற்சி கால வரையறுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்குள் இணைக்கப்பட்டு பயிற்சியை வழங்குதல்.
 • ஒரு வருடம் திருப்தியான பயிற்சி காலத்தின் இறுதியில் இவர்கள் பணியாற்ற விருப்பத்தை தெரிவித்துள்ள கிராமிய பிரதேசத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரச சேவைக்கு உட்பட்ட நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளுதல்.
 • 2020 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசு.
 • இலங்கைப் பொலிஸ் மற்றும் விஷேட அதிரப்படையில் சேவையை கைவிட்டு செல்லும் உத்தரவை பெற்றுள்ள பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் சேவையில் நியமித்தல்.
 • திட்டம் அல்லாத நன்கொடை நிதி உதவியின் கீழ் ஜப்பான் போதைப்பொருள் ஒழிப்பு பணிகளுக்காக 320 மில்லியன் ரூபா (ஜப்பான் யென் 200 மில்லியன்) நன்கொடை உதவி பெற அனுமதி.
 • யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுதல்.
 • கிழக்கில் அதிவேக வீதி திட்டம் மத்தள விமான நிலையத்தில் இருந்து வெல்லாவய மற்றும் சியம்பலாண்டுவ ஊடாக பொத்துவில் பிரதேசத்தை தொடர்புபடுத்துவதை நடை முறைப்படுத்துதல்.
 • இலங்கையில் உத்தேச அதிவேக வீதி வலைப்பின்னலை நிர்மாணிக்கும் நடைமுறையை முன்னெடுத்தல்.

Related posts

ஐதேக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு ?

reka sivalingam

நள்ளிரவு முதல் ரயில்வே வேலை நிறுத்தம்!

G. Pragas

பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் வீதித் தடைகள் நீக்கம்

G. Pragas