பாகிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது பகலிரவு போட்டி அடிலெய்டில் இடம்பெற்று வருகின்றது.
இந்தப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அவுஸ்திரேலியாவின் டேவிட் வோனர் முச்சதம் கடந்து 335 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன்படி டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையை வோனர் பெற்றுக் கொண்டுள்ளார்.
வோனருக்கு முன்னர் மத்யூ ஹெய்டன் 380 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக வோனர் முச்சதம் கடந்து 335 ஓட்டங்களை பெற்றுச் சாதித்துள்ளார்.
இதேவேளை 335 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த வோனர், மேற்கிந்திய வீரர் ப்ரைன் லாராவின் 400 ஓட்டங்கள் என்ற உலக சாதனையை தகர்க்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.
எனினும் அவுஸ்திரேலிய அணி 389 ஓட்டங்களை பெற்றபோது அணித்தலைவர் டிம் பெயின் தமது ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து டிக்ளேர் செய்தார். இதனால் உலக சாதனை படைக்கும் வாய்ப்பு கைநழுவிப் போயிருக்கின்றது.