கிழக்கு மாகாணம் செய்திகள் தலையங்கம்

முடக்கப்பிரதேசத்தில் இருந்து 32 பேருடன் சென்ற பஸ் சிக்கியது!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வெளிப் பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று ஓட்டமாவடி பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது ஓட்டமாவடியில் இருந்து வெளிப்பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலைக்கு 32 தொழிலாளர்களை பஸ்சில் ஏற்றிச் செல்வதாக சுகாதார தரப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து அதில் பயணம் செய்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் அரசு கவனமாக செயல்படவேண்டும்…!

Tharani

தாமரை தடாக பகுதியில் வாகன நெரிசல்

reka sivalingam

உணவு பாதுகாப்பு செயலமர்வு!

G. Pragas