in ,

முடக்கம் கிடையாது – அறிவித்தார் இராணுவ தளபதி

இவ்வார இறுதியில் முடக்கத்தை அமுல்படுத்த தீர்மானிக்கவில்லை. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து வீடுகளில் இருக்க வேண்டும்.

இவ்வாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா தற்போது நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நாளை (24) முதல் (26) வரை நீண்ட விடுமுறை வருவதால் நாட்டை முடக்குவது தொடர்பில் ஆராயப்பட்ட நிலையிலேயே, இந்த முடக்கம் அமுல்படுத்துவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தப்படுவதை உதவுவது பொதுமக்களின் பொறுப்பாகும். மூன்றாவது அலையை நாம் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நான்கு நாட்களேனும் நாட்டை முடக்குங்கள் – உபுல் ரோஹண

புதையல் நாணயம் விற்க முயன்றவர் கைது!