செய்திகள்

முட்டை விலை ரூ.15ஆக குறைவு; ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு

முட்டையின் விலை 22 ரூபாயாக அதிகரித்த நிலையில் பேக்கரி உரிமையாளர்களுக்கும் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவிருந்தது.

பிரதமருடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதற்கமைய பேக்கரி உரிமையாளர்களுக்கு 16 ரூபாய் 50 சதத்துக்கு முட்டையை பெற்றுக்கொடுக்க முட்டை உற்பத்தியாளர்கள் விரும்பம் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் முட்டையின் விலை 15 ரூபாய் வரை குறைவடைந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை அவசியம் என, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

பெண்களை பலாத்காரம் செய்த மஹிந்த அணியை பெண்கள் மறக்கவில்லை!

G. Pragas

இலங்கை பெண்கள் அணி தோல்வி

G. Pragas

வடக்கில் கண்ணி வெடி அகற்ற 2 மில்லியன் டொலர்கள்

Tharani