செய்திகள்

முதலையிடம் சிக்கிய சிறுமி பலி!

முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது சிறுமி, உயிரிழந்த சம்பவம் குருநாகல் – மீகலேவா பகுதியில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

மீகலேவா பகுதியில் உள்ள ஏரியொன்றில் குறித்த சிறுமியும், அவரது தாயும் நேற்று மாலை நீராட சென்ற போதே சிறுமி, முதலையிடம் சிக்கியுள்ளாள், பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து சிறுமியை காயங்களுடன் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சைக்காக தம்புத்தேகமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தாள்.

Related posts

தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து; இருவர் காயம்!

G. Pragas

ஆறாவது முறையாகவும் “Ballon d’Or” விருதை வென்றார் மெஸ்சி

Bavan

யாழ் ஆயரை சந்தித்த த.தே.ம முன்னணியினர்

G. Pragas