செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

முதல்தர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்க்கு கொரோனா தொற்று!

உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், அவரது மனைவி ஜெலேனா மற்றும் இரண்டு டென்னிஸ் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ‘அட்ரியா டூர்’ என்ற பெயரில் நலநிதி டென்னிஸ் கண்காட்சி போட்டியை செர்பியா மற்றும் குரோஷியாவில் நடத்தினார்.

இந்த போட்டியில் டொமினிக் திம் (ஒஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷ்யா), கிரிகோர் டிமித்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா), போர்னா கோரிச் (குரோஷியா) உட்பட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கிரிகோர் டிமித்ரோவ், போர்னா கோரிச் ஆகியோருக்கு முன்னதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இப்போது நோவக் ஜோகோவிச், அவரது மனைவி ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Related posts

மிளாகாய் தூள் வீசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – பிமல்

G. Pragas

துமிந்த விடுதலைக்காக விசேட வழிபாடு

Tharani

இன்றைய நாள் ராசி பலன்கள் (8/3) – உங்களுக்கு எப்படி?

Bavan