பதுளையில் பாடசாலையில் முதல் முறை கல்வி பயில தனது பாட்டியுடன் சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் மீது, அவ்வழியில் வந்த லொறியொன்று மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் இன்று (16) காை 8.00 மணியளவில் பதுளை இடம்பெற்றுள்ளது.
பதுளை – அசேலபுரையைச் சேர்ந்த சிவனேசன் வருண் பிரஜிஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
பாடசாலையொன்றுக்கு தரம் ஒன்றில் அனுமதிப்பதற்கு, அச்சிறுவனை அவரது பாட்டி, கூட்டிச் சென்றுள்ளார். மேற்படி பாடசாலையை அண்மித்த வேளையில் எதிர்த் திசையில் வேகமாக வந்த லொறி பாட்டியையும், சிறுவனையும் மோதிச் சென்றுள்ளது.
இவ்விபத்தில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானதுடன், பாட்டி படுகாயமுற்று பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.