செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

முதல் வித்து பொன் சிவகுமாரனுக்கு நினைவேந்தல்

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவு தினம் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இன்று (06) அஞ்சலி செலுத்தினர்.

உரும்பிராயில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணிக்கு முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த்தேசியக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பி ஸ்ரீகாந்தா, மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் உரும்பிராய் – வேப்பம்பிராய் வீதியில் அமைந்துள்ள மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் காலை 9 மணிக்கு அஞ்சலிசெலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பென்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

உரும்பிராய் பொதுச்சந்தையில் அமைந்துள்ள சிவகுமாரின் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்தில் 9.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பிகளான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

reka sivalingam

தாமரை மொட்டினை பற்றிக் கொண்ட “கை”

G. Pragas

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி சிறப்பாட்டம்

G. Pragas