செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

முன்னணி அலுவலகம் முற்றுகை; கரும்புலி நாள் அனுஷ்டிப்பை தடுக்கும் முயற்சியாம்!

தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் உள்ள அலுவலகம் தற்போது, இராணுவம் மற்றும் பொலிஸாருடைய முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அங்கு 50 இற்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டே மேற்படி முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று கரும்புலி நாள் என்பதால் குறித்த அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலேயே மேற்படி முற்றுகை நடத்தப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை காலை அலுவலகத்திற்கு வந்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கரும்புலி நாள் நினைவேந்தல் நடத்தக் கூடாது என்று எங்களையும் எச்சரித்து சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக இராணுவ அதிகாரி?

reka sivalingam

இஸ்ரோவின் ராக்கெட் அதிசயங்களை நிகழ்த்துகிறது – இஸ்ரோ

Tharani

ஜேர்மன் நாட்டு பிரதிநிதிகள் ஓட்டமாவடிக்கு விஜயம்

G. Pragas