குற்றம் செய்திகள்

முன்னாள் இராணுவ வீரரான ஆமி கமல் கைது

பிரதேசவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த, முன்னாள் இராணுவ வீரரான ஆமி கமல், ஹேன்பிட்டிய பிரதேசத்தில், வீடொன்றில் நடத்திய விசேட சோதனையின்போது, 10 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடை என்பவற்றுடன், வெலிப்பன்னைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமானமுறையில் வெடிகுண்டுகள் மற்றும் டீ-56 ரக துப்பாக்கி என்பவற்றை வைத்திருந்தமை, பிரதேச ஆடைத் தொழிற்சாலை கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில், சந்தேக நபருக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தில் கோப்ரலாக சேவையாற்றிய காலத்தில், சட்ட விரோதமான முறையில் டீ56 ரக துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த குற்றத்தின்பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிசிடீவி பொருத்திய அலுவலருக்கு மிரட்டல்!

reka sivalingam

மரக்கறியுடன் போதை பொருள் கடத்தல்; ஒருவர் சிக்கினார்!

G. Pragas

ஜசிந்தா போன்ற தலைவரே எமது நாட்டுக்குத் தேவை – பிமல்

G. Pragas