செய்திகள் பிரதான செய்தி

முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ இன்று (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு பொலிஸ் குழுவொன்றின் முன்னிலையில் இன்று அவர் சரணடைந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் நால்வருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரலாற்றில் இன்று – (21.01.2020)

Tharani

“நான் சொல்லவில்லை” மறுக்கிறார் சுமந்திரன்

G. Pragas

கொழும்பில் ஊரடங்கு தளர்வு சாத்தியமில்லை? – தீவிரமாக ஆராய்வு !

G. Pragas