செய்திகள் தலையங்கம் யாழ்ப்பாணம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி கோண்டாவில் பகுதியில் வைத்து திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது கைது செய்யப்பட்டார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் நேற்றிரவு அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்று பெற்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், இரவோடு இரவாக நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகளை அகற்றியுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தையும் கோப்பாய் பொலிஸார் அகற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வசந்தகால கொண்டாட்டம் தொடர்பில் ஆய்வு

Tharani

194 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பினர்

G. Pragas

கை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்!

Bavan