இந்திய செய்திகள் செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்

இந்தியா – ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சி வன்முறையில் ஈடுபடுவதாகத் தெரிவித்து இன்று (11) ஆந்திரா மாநிலத்தில் பேரணியொன்றுக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவை ஆட்சி புரியும் வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

காணாமல் போனோர் உயிரிழந்தார்களா?- கோத்தபய

Tharani

ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாறுகிறது

Tharani

குப்பை மேட்டில் திடீர் தீ

G. Pragas

Leave a Comment