in , ,

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் விழுந்து விபத்து 11 பேர் மரணம்

மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் முதல்கட்டமாக 9 பேர் உயிரிழந்தனர். தற்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால், குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மராட்டிய மந்திரி அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டஈடு

பேர்ல் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் செயற்கைகோள் படம் வெளியீடு