இந்திய செய்திகள் செய்திகள்

மும்பையில் வெங்காயத் திருட்டு- இருவர் கைது!

மும்பையில் 168 கிலோ வெங்காயத்தை திருடிய 2 பேர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், அதை திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் மும்பையின் டோங்க்ரி பகுதியிலுள்ள 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 21,160 ரூபாய் மதிப்பிலான வெங்காயங்கள் கடந்த 5ம் திகதி நள்ளிரவு திருட்டுப் போயுள்ளன.

இதுகுறித்த புகாரின்பேரில், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி பாெலிஸார் ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் இருட்டில் இரகசியமாக வந்து வெங்காய மூட்டைகளை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனடிப்படையில், விசாரணை நடத்தி அந்த 2 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

கோஹ்லியை விடாமல் தொடரும் நோட்புக்.

Bavan

கொரோனா தாக்கியோர் எண்ணிக்கை திடீர் உயர்வு!; இப்பாேது – 18

G. Pragas

நுவரெலியா மாவட்டத்தில் 92 பேர் இடம் பெயர்வு

Tharani