கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இரவு 11.45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.