கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

முற்பணம் வழங்காமைக்கு மஹிந்த எதிர்ப்பு

தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் முற்பணக் கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஸ்ரீல.பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தனை (பிள்ளையான்) இன்று (27) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனை தெரிவித்தார். மேலும்,

மலையக மக்களுக்கு தீபாவளிக்கு சிறிய சம்பள முற்பணம் வழங்கப்படும். ஆனால் இம்முறை அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு நாம் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளோம்.

அத்தோடு, நாம் இன்று பிள்ளையானை சிறைக்குச் சென்று பார்வையிட்டோம். அவரது உடல் நலம் தொடர்பாகவே விசாரித்து வந்துள்ளோம்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அனைத்து மக்களும் சரியான முடிவொன்றை எடுக்க வேண்டும்.

பிழையான முடிவுகளை எடுத்துவிடக்கூடாது என்பதைத்தான் நாம் அனைவருக்கும் தெரிவிக்கின்றோம். மக்கள் இம்முறை தெளிவாக வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்த அரசாங்கம் எந்தவொரு தரப்புக்கும் சேவை செய்யவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நான் செய்த அபிவிருத்திகளை தவிர்த்து வேறு அபிவிருத்திகளைக் காண முடியாதுள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்றே நாம் நம்புகிறோம் – என்றார்.

Related posts

வல்லையில் ஆணின் சடலம்!!

G. Pragas

கடத்தல் விவகாரம் சவேந்ரவிடம் ஐந்து மணி நேரம் சிஐடி விசாரணை

G. Pragas

பிரதமர் – கூட்டமைப்பு இடையே இன்று விவாதிக்கப்பட்டவை என்ன?

G. Pragas

Leave a Comment