in ,

முல்லைத்தீவில் வெற்றிகரமாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தனி எலும்பு முறிவு பிரிவு இல்லாத போதும், பல வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்ற நிலையிலும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையால் முதல் முறையாக வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சந்தருவன் பண்டார ஹெராத் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட யாழ் போதனா மருத்துவமனை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுந்தரலிங்கம் சுதர்ஷன் தலைமையிலான குழு உறுப்பினர்கள் இந்த சாதனையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

மூட்டு வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் மருத்துவ அத்தியட்சகர் மற்றும் மருத்துவ குழுவினர் இந்த சாதனைக்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சகங்களின் ஆதரவுக்கும், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் ஆதரவுக்கும் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இந்த அறுவை சிகிச்சை வள குறைபாடுகளுடன் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி சத்திரசிகிச்சை கூடம் இல்லாத பொதுவான கிருமிநீக்கம் செய்யப்பட்ட பொது சத்திரசிகிச்சை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டொலர் பிரச்சனை; அரசால் தலையெடுக்க முடியவில்லை!

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்! – சுகாதார அமைச்சர்