in

முல்லைத்தீவுப் பெண் தமிழகத்தில் கைது!

முல்லைத்தீவுப் பெண் தமிழகத்தில் கைது!

தமி­ழ­கத்­தி­லி­ருந்து தனுஷ்­கோடி கடல் வழி­யாக சட்­ட­வி­ரோ­த­மாக இலங்­கைக்கு தப்ப முயன்ற இலங்­கை­யைச் சேர்ந்த இளம் பெண் ஒரு­வர் நேற்­றுக்­காலை கைது செய்­ய ப்பட்­டார்.
இலங்கை முல்­லைத்­தீவு மாவட்­டம் முள்­ளி­ய­வளை பகு­தி­யைச் சேர்ந்த 19 வய­து­டைய பெண்ணே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.
இறு­திக்­கட்­டப்­போ­ரின்­போது இலங்­கை­யி­லி­ருந்து தப்பி தமி­ழ­கம் வந்து இலங்கை ஏதி­லி­கள் மறு­வாழ்வு முகா­மில் தங்­கி­யி­ருந்­தார். அங்­குள்ள ஒரு­வ­ரு­டன் ஏற்­பட்ட காத­லால் 2018 ஆம் ஆண்டு விமா­னம் மூலம் சென்னை வந்­துள்­ளார் என்­பது விசா­ர­ணை­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

விசா முடிந்த பின்­னர் இலங்­கைக்கு திரும்­பிச்­செல்­லா­மல் சென்னை வள­ச­ர­வாக்­கத்­தில் உள்ள உற­வி­னர் வீட்­டில் சட்­ட­வி­ரோ­த­மாக அவர் தங்கி வாழ்ந்து வந்­துள்­ளார்.
அந்­தப் பெண்­ணின் தந்தை, முல்­லைத்­தீவு மாவட்­டம் முள்­ளி­ய­வளை கிரா­மத்­தில் வசித்து வரு­கின்­றார். அவ­ருக்கு உடல்­நிலை சரி­யில்­லா­த­தால் இலங்­கைக்கு திரும்பி செல்­வ­தற்­காக அந்­தப் பெண் நேற்று அதி­காலை தனுஷ்­கோ­டி­யி­லி­ருந்து நாட்­டுப்படகு மூலம் சட்­ட­வி­ரோ­த­மாக முல்­லைத்­தீ­வுக்கு புறப்­பட்­டுள்­ளார்.
எனி­னும், தனுஷ்­கோ­டியை அடுத்த இரண்­டாம் மணல் திட்டுப் பகு­தி­யில் இந்­தியக்கட­லோர காவற்படையின் ரோந்துப் படகு வந்­ததை அவ­தா­னித்த பட­கோட்டி கஸ்­தூ­ரியை முதல் மணல் திட்டுப் பகு­தி­யில் இறக்கி­விட்டு சென்­று­விட்­டார் என்று கூறப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து, அந்­தப்­ப­கு­தி­யில் மீன் பிடித்­து­கொண்­டி­ருந்த மீன­வர்­கள் கொடுத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் ராமேஸ்­வ­ரம் மெரைன் பொலி­ஸார் பட­கில் சென்று அந்­தப் பெண்ணை கைது­செய்து தனுஷ்­கோ­டிக்கு அழைத்து வந்­த­னர்.
முதல் கட்ட விசா­ர­ணை­யின் பின்­னர் அவர், ராமேஸ்­வ­ரம் அனைத்து மக­ளிர் பொலிஸ் நிலை­யத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார். பிடி­பட்ட இலங்கை பெண் வெளி­நாடு செல்ல தமி­ழ­கம் வந்து சட்­ட­வி­ரோ­த­மாக தங்கி இருந்­தாரா என்ற கோணத்­தில் மத்­திய உள­வுத்­துறை அதி­கா­ரி­கள் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

தனுஷ்­கோ­டி­யில் இருந்து சட்­ட­வி­ரோ­த­மாக நாட்டுப்பட­கில் அந்தப் பெண்ணை அழைத்­துச் சென்ற முக­வரை தேடி வரு­கின்­ற­னர்.
கஸ்­தூ­ரி­யி­ட­மி­ருந்து பாஸ்­போர்ட் மற்­றும் இலங்கை குடி­யு­ரிமை ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன. அவர் மீது வழக்­குப் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.
விசா­ர­ணை­யின் பின்­னர் ராமேஸ்­வ­ரம் நீதி­மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

குடாநாட்டில் குறைகிறது கொரோனாத் தொற்று எனினும் அபாயநிலை நீடிப்பு!

இலங்கை அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய நால்வர் தமிழக பொலிஸாரால் கைது!