செய்திகள் முல்லைத்தீவு

முல்லைத்தீவும் முடங்கியது

எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில், கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகளும் ஆள்நடமாடமற்ற நிலையில், வெறிச்சோடிப்போயுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக முல்லைத்தீவு நகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டதுடன், பொதுச்சந்தை வளாகம் என்பனவும் மூடப்பட்டுள்ளன. இதனால் முல்லை நகர்ப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதேபோல் முல்லைத்தீவின் முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளும் இவ்வாறே கடைகள் அடைக்கப்பட்டு, சனநடமாட்டங்கள் இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (246)

Related posts

மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலவட்டும் – ஜனாதிபதி

Tharani

தம்புளை பகுதியில் விபத்து-15 பேர் காயம்

reka sivalingam

தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் விவாதம் அடுத்த மாதம்

Tharani