செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

முல்லையில் வறிய மக்களுக்கு நிவாரணம்!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு வடமாகாண ஆளுநர் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட கோதுமைமா வறிய மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண ஆளுநர் ஊடாக கிடைக்கப்பெற்ற 06 மெற்றிக்தொன் கோதுமைமா  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள  கிராம சேவகர்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள சமூர்த்தி நிவாரணம் கிடைக்காத மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கிராம சேவகர் ஊடாக குறித்த கோதுமைமா இன்று வழங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

கடலில் மூழ்கிய மாணவனை காணவில்லை

G. Pragas

ரஞ்சனின் குரல் பதிவுகளை கையளிக்க நடவடிக்கை

reka sivalingam

சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரம்; விசாரணை அறிக்கை நீதிமன்றுக்கு

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.