in , ,

முள்ளியில் அதிரடி படை துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயம்!

மணல் ஏற்றிய டிப்பர் மாேதி அதிரடி படை சிப்பாயும் காயம்

வடமராட்சி – முள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகழப்பட்ட மணலை டிப்பரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் இருவர் அதிரடி படையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தின் முன்பாக டிப்பர் வாகனம் அதிரடிப் படையினரை மோதியதாகவும் அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

‘சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக தகவல் வெளியாகிய நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வீதியில் ஆணிகள் பொருத்தப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்களை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வாகனங்கள் குறித்த தடைகளையும் தாண்டியதுடன் தம் மீதும் மோதியதாகவும் அதன் பின்னரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும்’ அதிரடிப் படை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயம்!!

24 மணி நேரத்தில் விபத்துக்கள் காரணமாக 16 பேர் பலி!