in , ,

முழுமையாக பற்றி எரியும் ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’! வெடித்து சிதறும் அபாய கட்டத்தில்…!

எரிந்துகொண்டிருந்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலில் தீ பரவலானது திடீரென மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை குறித்த தீயானது கப்பல் முழுதும் பரவியுள்ளது.

கப்பலின் பின் பகுதியில் பரவ ஆரம்பித்த தீ தற்போது கப்பலின் முன் பகுதி வரை அனைத்து பகுதிகளையும் ஆட்கொண்டுள்ளதாக, இன்று காலை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி ஊடாக முன்னெடுத்த மேற்பார்வையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று மாலையாகும் போது கப்பலின் நடுப் பகுதியில் தீ பரவல் சற்று தணிந்திருந்ததாகவும், முன், பின் பகுதிகளில் தொடர்ந்தும் பாரிய தீ பரவலை அவதானிக்க முடிந்ததாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த கப்பலை நெருங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், குறித்த கப்பல் முழுதும் தீ பரவியுள்ள நிலையில், கப்பலின் எண்ணெய் தாங்கிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், கப்பன் எண்ணெய் தாங்கிக்கு தீ பரவினால் கப்பல் வெடித்து சிதறும் அபாயம் காணப்படுவதாக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனீ லஹந்தபுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் 69 பேர் கொவிட்டால் மரணம்

தீ விபத்துக்குள்ளாகிய கப்பலிலிருந்து கரையொதுங்கும் பெறுமதியான பொருட்கள்