செய்திகள் பிரதான செய்தி

‘கொரோனா காவு’ உடலை அடக்கம் செய்ய கோரி முஸ்லிம் தலைவர்கள் பிரதமருடன் பேச்சு!

கொரோனாவால் (கொவிட்-19) உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று (01) இரவு உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த பீ.எச்.எம்.ஜனூஸ் (72- என்பவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பில், நேற்று இரவு முழுவதும் உயரதிகாரிகள் மற்றும் அரச உயர்மட்டத்துடன் பல தடவைகள் பேச்சு நடாத்தி, தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும் சாதகமான முடிவு எட்டப்படாத நிலையிலேயே, தற்போது பிரதமரை நேரில் சந்திக்கவிருக்கிறோம். – என்றார்.

Related posts

எதிர்வரும் தேர்தலில் முகாம்களிலும் வாக்களிப்பு நிலையங்கள்?

reka sivalingam

நம்பிக்கை தரும் செய்தி; நான்கு மாதக் குழந்தை குணமடைந்தது!

G. Pragas

கசோக்கியை காென்ற கொடூர கொலையாளிகளை மன்னித்த மகன்கள்

G. Pragas