கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்; விஸ்வரூபமெடுக்க கூடாது

முஸ்லிம் பெண்களில் சிலர் அணியும் ஆடை விவகாரத்தை வைத்துக்கொண்டு நாட்டில் மீண்டும் பெரும் பூதமொன்று கிளம்பி விட்டதென மதவாதிகள் கூச்சிலிடுமளவுக்கு அந்த விவகாரத்தை விஸ்வரூபமெடுக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென கிழக்கு முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸிர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 8ம் திகதி அவசரகாலச்சட்டம் முற்றாக நீக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் பெண்கள் சிலரின் ஆடை அணிதல் தொடர்பான விவகாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று (06) வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மனித அடிப்படைச் சுதந்திரங்களில் ஆடைச்சுதந்திரமும் முக்கியவொன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், சமகாலத்தில் இந்த சுதந்திரம் முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நடைபெற்ற துன்பம் நிறைந்த இன வன்முறைகளின் பின்னர் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது, முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை விவகாரம் விஸ்பரூபமெடுத்து முகத்திரைக்கான தடை விதிக்கப்பட்டது.

எனினும், கடந்த மாதம் 8ஆம் திகதி அவசரகாலச்சட்டம் முற்றாக நீக்கப்பட்ட நிலையில், இந்த ஆடை அணிவது தொடர்பான விவகாரம் முற்றுப்பெறவில்லை. எனவே, இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க அரசியல் தரப்புகள் முன்வர வேண்டும்.

கடந்த காலங்களில் இது விடயத்தில் முஸ்லிம் அரசியல் தரப்புகள் அரசுடன் மேற்கொண்ட முயற்சிகள் எவற்றையும் உரிய தரப்பு பொருட்படுத்தவில்லை. பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தொடர்ந்தும் பாதுகாப்புத்தரப்பினர் வசமிருப்பதன் காரணமாக, சமீபத்தில் முகத்திரையை அணிந்து சென்ற முஸ்லிம் பெண்கள் அசௌகரியத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

இந்நிலையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும் முகத்திரையை அணிந்து பொது இடங்களுக்கு செல்லாமல் கால நேர சூழலை அனுசரித்து சாதுர்யமாக நடந்து கொள்ளுமாறு முகத்திரை அணியும் பெண்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், இது விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எட்ட வேண்டியது அவசியமானது.

கால காலமாக நமது மக்கள் அனுபவித்து வந்த மதச்சுதந்திரம், அந்த மக்களே விரும்பாத ஒரு சம்பவம் காரணமாக இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்களின் கலாசாரமும் பண்பாடும் இன்று எடுப்பார் கைப்பிள்ளை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலை தொடருமானால், முஸ்லிம்களின் எதிர்காலம் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. இந்த அபாயகரமான நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அரசியல் தரப்பினர் உடன் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான காலம் இப்போது நமக்கு கனிந்திருக்கிறது. இதனைச் சரியான முறையில் கையாண்டு முஸ்லிம் அரசியல் தரப்பினர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல், கலாசார, பண்பாட்டு அம்சங்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (கு)

Related posts

யாழில் நிமலராஜனின் 19ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

பிக்குகளை அவமதித்தமையாலேயே நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டதாம்!!

G. Pragas

மருத்துவ ரீதியிலும் தமிழினம் அழிகின்றது – சிவமோகன்

G. Pragas

Leave a Comment