உலகச் செய்திகள்செய்திகள்

மூஞ்சூறு எலிகள் மூலம் சீனாவில் புதிய வைரஸ் உருவெடுப்பு

சீனாவின் கிழக்குப் பகுதியில் விலங்குகள் மூலம் பரவுகின்ற புதிய வைரஸ் தொற்றுடன் இதுவரை 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நிபுணர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் மூஞ்சூறு எலிகள் மூலம் தொற்றியிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

‘லாங்யா ஹெனிப’ வைரஸ் அல்லது சுருக்கமாக ‘லேவி’ (LayV)என்று இந்த வைரஸ் அழைக்கப்படுகின்றது.

எனினும் இன்னமும் ‘லேவி’ (LayV) மனிதர்களில் இருந்து மனிதருக்குப் பரவக் கூடியதா? என்பது உறுதிசெய்யப்படவில்லை என்று விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்படுகிறது.

‘லாங்யா ஹெனிப’ வைரஸ் அல்லது சுருக்கமாக ‘லேவி’ (LayV)என்று இந்த வைரஸ் அழைக்கப்படுகின்றது.

ஏற்கனவே கண்டறியப்பட்ட கொடிய ‘நிபா’ மற்றும் ‘ஹெண்ட்ரா’ ஆகியவற்றின் குடும்பத்தைச் சேர்ந்தது என நிபுணர்கள் உறுதிசெய்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்களில் பலர் விலங்குகளோடு நெருக்கமாக வசிக்கின்ற விவசாயிகள் என்றும் சோர்வு, இருமல், பசியின்மை போன்ற பொதுவான அறிகுறிகளும் இரத்த அணுக் குறைபாடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற தீவிரமான அறிகுறிகளும் அவர்களிடையே அவதானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மனிதரிடையே பெரும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பெருந் தொற்று நோயாகப் பரவக்கூடிய வீரியம் கொண்டது அல்ல என்றும் நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகின்ற நிலையில் புதிய வைரஸான இந்த ‘லேவி’ வைரஸ் பற்றிய உலக நாடுகளிடையே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214