குற்றம்யாழ்ப்பாணம்

மூதாட்டி படுகொலை; சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் -சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி( வயது-72 ) என்ற மூதாட்டி கடந்த 22 ஆம் திகதி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூதாட்டி தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே மூதாட்டியை பூச்சாடியால் அடித்துக்கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார், கொலை நடந்த வீட்டிற்கு அருகில் இருந்த சி.சி.ரி.வி காணொளிகள் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

காணொளியில் கொலை சந்தேக நபர் துவிச்சக்கர வண்டியில் தப்பிச் செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தி இருந்த பொலிஸார் யாழ்ப்பாணம் முலவை எனும் பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282