செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

மூத்த ஊடகவியலாளர் பெருமாள் காலமானார்

தமிழ் பத்திரிகை துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என்று அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86வது வயதில் நேற்று (05) காலமானார்.

இரத்தனபுரியில் 1933ம் ஆண்டு பிறந்த அவர் மாணவராக இருந்த கால பகுதியிலேயே பத்திரிகை துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார்.

வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பத்திரிகைத் துறையை ஆரம்பித்தார். பின்னர் 1961ம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பணியினை தொடர்ந்தார். அங்கு சிறிது காலத்திலேயே ஈழநாடு வாரமஞ்சரியின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

அதன் பின்னரான கால பகுதியில் உதயன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

55 வருடங்களாக பத்திரிகை துறையில் பணியாற்றிய அவர் தனது 84வது வயதில் 2017ம் ஆண்டு பத்திரிகை துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் இறைவனடி சேர்ந்தார்.

Related posts

44 இந்தியர்கள் கொழும்பில் கைது!

G. Pragas

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

admin

பெண்கள் வாழ்வுரிமைக் கழகம் ஆரம்பிப்பு

G. Pragas

Leave a Comment