அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளை (02) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் 16ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி, நாலந்தா கல்லூரி, இந்து கல்லூரி, களுத்துறை ஞானோதய மகா வித்தியாலயம், இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம், குருணாகல் சாந்த ஹானா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி, விஹாரமஹாதேவி மகளீர் கல்லூரி, சீதாதேவி மகளீர் கல்லூரி, காலி வித்யாலோக கல்லூரி, பதுளை விஹாரமஹாதேவி மகளீர் கல்லூரி மற்றும் ஊவா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தவிர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறக்கப்படுகிறது.