கிளிநொச்சி செய்திகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம்

மூன்று மாவட்டங்களில் தபால் மூலம் 90% வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 31ம் திகதி மற்றும் 01ம் திகதிகளில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 98 வீதமான வாக்குப்பதிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் 97 வீதமான வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் 90 வீதமான வாக்குப்பதிவும் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் நாளை மறுதினம் (04) மற்றும் (05) தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

குறித்த நாட்களில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் எதிர்வரும் 7ம் திகதி தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும் என்றும் தேர்தல்கள் அணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பாணின் விலையும் உயர்ந்தது!

G. Pragas

சஜித்தின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் தடை

G. Pragas

பாலிதவிற்கு மாலை அணிவித்து வரவேற்பு

G. Pragas

Leave a Comment