செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

மூலப்பொருள்கள் விலையுர்வாலேயே பேக்கரி உணவுகளின் விலை அதிகரிப்பு

வெதுப்பக உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலைகள் குறைவடைந்தால் பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையைக் குறைக்க முடியும் என யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரி அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெதுப்பக உற்பத்திகளின் விலையை நாங்களாக அதிகரிக்கவில்லை. மூலப்பொருள்களின் விலையுயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்களினாலேயே அதிகரிக்க நேரிட்டது.

தற்போதும் மூலப்பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டு எரிபொருள் சீராக கிடைக்கப்பெறுமாயின் எமது பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலையைக் குறைப்பதற்கு நாம் தயார்.

தற்போது வெதுப்பகங்கள் எரிபொருளைப் பெற யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் ஒரு வெதுப்பகத்துக்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்ற திட்டத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண  பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தை ஏனைய மாவட்டங்களிலும் அல்லது நாடுமுழுவதிலும் நடைமுறைப்படுத்துமிடத்து வெதுப்பகங்களுக்குரிய எரிபொருளை இலகுவாகப் பெற முடியும்.

அவ்வாறான நிலையில் மக்களுக்குத் தடையின்றி சேவையை முன்னெடுக்க முடியும்– என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051