செய்திகள்பிரதான செய்தி

மூலப்பொருள் விலையுயர்வாலே பிஸ்கட் விலை அதிகரிப்பு!

பிஸ்கட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் விலையுயர்வால் அவற்றின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது என இலங்கை பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அனைத்து பொருள்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன.
பிஸ்கட் தயாரிக்கப் பயன்படும் விசேட கோதுமை மாவின் விலையும் 300 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பிஸ்கட்டுக்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கீழ் பிஸ்கட்களை அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் ஒரு அங்கமாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  அமைச்சர்    நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214