செய்திகள் யாழ்ப்பாணம்

மூளாயில் இடம்பெற்ற இந்து இளைஞர் கலை விழா!

மூளாய் இந்து இளைஞர் மன்றம் நடத்திய கலை விழா நேற்று (01) மாலை இந்து இளைஞர் மன்ற பிரசாத் அரங்கில் மன்றத் தலைவர் த.சசிகரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது துணைவியார் யசோதை சரவணபவன் சகிதம் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயப் பிரதம குருவும் மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாகிய பிரம்மஸ்ரீ தியாக உமாசுதக்குருக்களும், கௌரவ விருந்தினராக சங்கானை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் த.ஸ்ரீஸ்கந்தராசாவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலயப் பிரதம குரு பிரம்மஸ்ரீ சி.ஜெயானந்தசர்மா ஆசியுரை வழங்கினார். மூளாய் இந்து இளைஞர் மன்ற முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வுகள் மற்றும் மூளாய் ஞானவொளி அறநெறிப்பாடசாலை மற்றும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

சிறப்பு நிகழ்வாக “இந்துசமய வாழ்வியலை மேம்படுத்துவதற்கு இன்று பெரிதும் தேவைப்படுவது பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்ளுதலே – நவீன முறைகளை உள்வாங்குதலே” என்ற பொருளில் அமைந்த பட்டிமண்டபம் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் செந்தூர்ச்செல்வன், விவசாய அமைச்சு உத்தியோகத்தர் ந.ஐங்கரன், கிராம அலுவலர் ஜீவா. சஜீவன், யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் வி.நவநீதன், பொருளியல் ஆசிரியர் சி. ஸ்ரீரங்கன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மன்றச் செயலாளர் ப. சாரங்கன் நன்றியுரை ஆற்றினார்.

Related posts

சலுகைகள் மீறப்பட்டதால் அதிரடித் தடை விதித்த பொலிஸ்!

Tharani

சிஐடி நிஷாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை!

reka sivalingam

தூக்கத்தால் விபத்து; 18 பேர் படுகாயம்!

reka sivalingam