உலகச் செய்திகள் செய்திகள்

மெக்சிகோவில் 15 பொலிஸார் சுட்டுக் கொலை!

மெக்சிகோவில் இயங்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலொன்று நேற்று (15) நடத்திய தாக்குதலில் 15 பொலிஸார் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு மேலதிக படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்வதற்காக பொலிஸார் அகுலியா என்ற நகரத்துக்கு சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சென்ற வாகனத்தின் மீது அதிரடித் தாக்குதலை நடத்தி பொலிஸாரை கொலை செய்த குறித்த போதைப்பொருள் குழு வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளது .

பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

Related posts

கர்நாடக இசைப் போட்டி; நெல்லியடி மாணவி முதலிடம்

reka sivalingam

கொழும்பில் வாகன நெரிசல்

reka sivalingam

அழிவிலிருந்து இனத்தை காப்பாற்றிய “100 வயது” ஆமை

Tharani