கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மென்டிஸ் கம்பனிக்கு எதிராக போராட்டம்!

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை வெம்பில் அமையப் பெற்றுள்ள மென்டிஸ் கம்பனியை உடன் இடை நிறுத்தி தருமாறு கோரி நேற்று (02) பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு வாழைச்சேனை கும்புறு மூலை சந்தியின் பிரதான வீதியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டமானது கால்நடையாக ஊர்வலமாக வாழைச்சேனை பிரதேச செயலகத்தினை வந்தடைந்தது.

“வேண்டாம் வேண்டாம் மெண்டிஸ் கம்பனி வேண்டாம்.””தமிழரின் வளங்களை அழிக்காதே”,வாழ விடு.வாழ விடு.”மூடி விடு, மூடி விடு கம்பனியை மூடி விடு.” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக நடந்து வந்தனர்.

இதன்போது பிரதேச செயலாளர் ஏ.தனபாலசுந்தரத்திடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக மதுவரி திணைக்கள ஆணையாளர் திணைக்களத்தினால் தங்களுக்கு இவ் விடயம் தொடர்பான ஆய்வறிக்கையினை அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Related posts

மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

reka sivalingam

வைத்தியர்களுடன் இந்திய விமானம் சீனாவிற்கு புறப்பட்டது

reka sivalingam

‘சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும்’ நடைபவனி

G. Pragas