செய்திகள் பிந்திய செய்திகள்

மெழுகு உருவ நூதனசாலையை திறந்து வைத்தார் சிறிசேன

பொலனறுவை புராதன தொழில்நுட்ப நூதனசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (12) திறந்துவைத்துள்ளார்.

புதிய யுகத்திற்கேற்றவாறு நூதன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்தின் பண்டைய தொழிநுட்ப முறைகளை தற்போது வாழ்கின்ற மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், இலங்கையின் புராதன தொழிநுட்பதுடன் தொடர்புடைய தொல்லியல் பொறுமதிவாய்ந்த பொருட்களை சேகரித்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கிலும் ஜனாதிபதியினால் கடந்த ஜூலை மாதம் 3ம் திகதி இந்த நூதனசாலை திறந்துவைக்கப்பட்டது.

இதன் விசேட பிரிவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையானது, ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்டது. இதில் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சிப் புரிந்த அரச தலைவர்களின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

இடைக்கால கணக்கு அறிக்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

Tharani

கரவெட்டி – பருத்தித்துறை செயலக பிரிவுகளில் ரூ.140 மில்லியனில் அபிவிருத்தி திட்டம்

Tharani

சற்றுமுன் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

G. Pragas