in ,

மேச்சல் தரைகள் அபகரிப்பை எதிர்த்து பட்டிப்பளையில் போராட்டம்!

மட்டக்களப்பு – மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காடுகள் அழிக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென் மேற்கு கால்நடை உற்பத்தி பாற்பண்ணை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.

மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று அங்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஜனாதிபதி,பிரதமருக்கான மகஜர் ஒன்று பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸிடம் வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள், கால்நடை பண்ணையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். (150)

கறுவாக்கேணியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

ஹெரோயினுக்காக சிறுநீரகத்தை விற்றவர் கைது!