கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மேலதிக வகுப்புக்களுக்கு செல்லாத மாணவனுக்கு 197 புள்ளிகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் சசிகாந்தன் டேனுவர்சன் 197 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளார்.

இக்கல்லூரியில் இருந்து 155 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 67 மாணவர்கள் 151 வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். 144 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர்கல்லூரியில் 77 மாணவர்களும், புனித மரியாள் கல்லூரியில் 28 மாணவர்களும், உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் 29 மாணவர்களும், புனித சூசையப்பர் கல்லூரியில் 11 மாணவர்களும், தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் 151 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

அழகுகலை நிபுநரான சசிகாந்தன் தனது மகனின் சாதனை பற்றி தெரிவிக்கையில்,

பாடசாலையில் கற்றுக்கொடுக்கப்படும் விடயங்களுக்கு மேலாக மனைவி உற்சாகப்படுத்தி மேலதிகமாக விளக்கங்களை வழங்கி வைத்தார். இவ்வெற்றி அவருக்கு கிடைத்த வெற்றியே. நான் மேலதிக வகுப்புகளுக்கோ, வினாப்பத்திர வகுப்புகளுக்கோ மகனை அனுப்பவில்லை. அவரை கஸ்டப்படுத்த விரும்பவில்லை. அவர் நன்றாகவே சகல பரீட்சைகளிலும் புள்ளிகள் எடுத்து வந்துள்ளார்.

வலய கல்வி அலுவலகத்தால் நடத்தப்படும் பரீட்சைகளில் கூட 195 புள்ளிகள் எடுத்துள்ளார். அவர் 195 புள்ளிகள் எடுப்பார் என நம்பியிருந்தேன். ஞாயிற்று கிழமைகளில் விஸ்வநாத சுவாமி சிவன் ஆலய அறநெறி வகுப்புகளுக்கு தவறாது அனுப்பி விடுவேன். அவரை ஏற்றி இறக்குவதே என் பணி. – என்றார்.

டேனுவர்சனின் தாயார் திருமதி சசிகாந்தன் சுஹாசினி தெரிவிக்கையில்,

மகன் 8.00 மணிக்கு நித்திரை வருகிறது என்று சொன்னாலும் அவரை தூங்க வைத்துவிடுவேன், ஓய்வை அவர் விரும்பினால் அதற்கு தடை விதிப்பதில்லை. காலையில் 5.30 மணிக்கே தூக்கத்தால் எழுவார். அரை மணி நேரம் படிப்பார். படிப்பதை ஆர்வத்துடன் கவனமாக படித்து விடுவார். இதுவே அவரது சாதனைக்கு காரணமாகும் என்றார் அடக்கத்துடன். (சூ)

Related posts

எங்களைத் திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் – கஜேந்திரகுமார்

G. Pragas

தனிப்பட்ட தகவல் சேகரிப்பு தளம் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

G. Pragas

இருதேசத் தீர்வு இலங்கைக்கு அல்ல!

G. Pragas

Leave a Comment