in , , ,

மேலும் இருவர் உயிரிழப்பு – யாழ். மாவட்ட கொவிட் உயிரிழப்புகள் 50 ஆக உயர்ந்தது!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த உயிரிழப்புக்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றுச் சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கொவிட் சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் உள்ளிட்ட மூவர் நாளை நீதிமன்றில் ஆஜர்!

அசாதாரண காலநிலையால் 10 மாவட்டங்கள் பாதிப்பு