in ,

மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தளர்வான அணுகுமுறைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தண்டனை சட்டத்தின் கீழ் பொருத்தமான குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

விசாரணை அறிக்கை இன்று (23) நாடாளுமன்ற நூலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த பரிந்துரை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 2019 ஏப்ரல் 16 – 21ம் திகதி வரை இந்தியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் செல்லும் போது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காதமை தொடர்பிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அப்போதைய மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க ஆகியோருக்கு எதிராகவும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தளர்வு நிலை பற்றியும் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. எனினும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது பற்றி சுட்டிக்காட்டப்படவில்லை.

உபுல் தரங்க ஓய்வு!

வந்தார் இம்ரான் கான்; வரவேற்றார் மஹிந்த