செய்திகள்

மொட்டில் இருந்து நறுமணம் வீசும் – டிலான்

மொட்டில் இருந்து மாத்திரமே நறுமணம் வீசும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டுமானால் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றியடைய செய்ய வேண்டியது கட்டாயம். 2 அடி 1 அங்குலம் நீளமான வாக்காளர் பட்டியலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க கூடிய ஒருவரே உள்ளார்.

அவர் தான் கோட்டாபய. நான் பசறைக்கு சென்ற போது வாக்கு சீட்டு நீளம் என்பதால் முதியவர்களுக்கு அது குறித்து கற்பிக்க வேண்டும் என கூறினேன். அதற்கு பதிலளித்த பெண் ஒருவர் மொட்டின் வாசனை உணர்ந்து வாக்களிப்பதாக தெரிவித்தார்.

வாக்கு சீட்டில் உள்ள மற்றையர்கள் அனைவரும் தூர்நாற்றம் வீசகூடியர்கள். ஆகவே, மொட்டில் இருந்து மாத்திரமே நறுமணம் வீசும் – என்றார்.

Related posts

கைக்குண்டு மீட்புத் தொடர்பில் இளைஞன் கைது – 14 நாட்கள் மறியல்

G. Pragas

நான் சென்ற இடத்தில் பயங்கரவாதி ஷஹ்ரானும் இருந்தான்- ஹக்கீம்

G. Pragas

சஜித்தின் திருகோணமலை மாவட்ட பிரச்சாரம் இன்று இடம்பெற்றது

G. Pragas

Leave a Comment