உலகச் செய்திகள் செய்திகள்

மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியா மீதும் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது.

இந்தநிலையில் பிரதமர் மோடி அண்மையில் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேர்தலை பிற்போடுங்கள் – ரத்ன தேரர்

கதிர்

இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

Tharani

முக்கிய அறிவிப்பு வெளியானது!

G. Pragas