செய்திகள் பிரதான செய்தி

ம.உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் முடக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று (20) வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் முடக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் மூடுமாறும் வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்யுமாறும் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகமும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளது.
இருப்பினும் 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

சூரிய கிரகணத்தின் தோற்ற மாற்றங்கள்

reka sivalingam

அரைசொகுசு பஸ் விரைவில் இரத்து செய்ய தீர்மானம்

reka sivalingam

அவுஸ்திரேலிய ரயில் விபத்து

Tharani

Leave a Comment