கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

யானைகளின் அட்டகாசத்தினால் கட்டடங்கள் மற்றும் மரங்கள் சேதம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளிமடு மக்குலானை பகுதியில் யானைகளின் அட்டகாசத்தினால் கட்டடங்கள் மற்றும் மரங்கள் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பள்ளிமடு மக்குலானை மக்கா பாமிற்குள் வியாழக்கிழமை இரவு ஆறு யானைகள் சுற்றுவேலியை துவம்சம் செய்து கோழி வளர்க்கும் கட்டட கூரையினை தேசப்படுத்தியுள்ளது.

அத்தோடு பத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள், ஐந்துக்கு மேற்பட்ட தென்னை மரங்கள், பல கற்றாளைகள் உட்பட்டவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், தண்ணீர் குழாய்களையும் உடைத்துள்ளதாக மக்கா பாம் பொறுப்பாளர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களை அண்டிய பகுதியில் தற்போது வேளான்மை செய்கை இடம்பெற்று வரும் நிலையில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்த வண்ணம் காணப்படுவதாகவும், இரவில் விழித்திருந்து காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகளின் வருகை தொடர்ந்த வண்ணம் இடம்பெறுமாக இருந்தால் வேளான்மை மற்றும் தோட்டப் பயிர்கள் என்பவற்றை அழித்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. (NK)

Related posts

அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் கையளிப்பு

G. Pragas

ஞானசார தேரர் மற்றும் மூவருக்கு அழைப்பாணை

G. Pragas

தேரர்களின் அடாவடிக்கு எதிர்ப்பு; வடக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

G. Pragas

Leave a Comment