in , ,

யாழின் 1000 பிசிஆர் முடிவுகள் இன்று!

யாழ்.மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பிசிஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்றும் வெளியாகும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு விளக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் திருமண மண்டபங்கள், திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்தும் நீடிக்கும்.

பாடசாலைகள் முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று 19ம் திகதியே ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டார்.

புத்தாண்டுக்காக அனைத்து மதுசாலைகளும் மூடல்!

பணிகளை தொடங்கியது யாழ் மாநகர ‘காவல்படை’